Main Menu

‘இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே…’ – கவிஞர் பழனி பாரதி

டுமலையில் நிகழ்ந்த ஆணவக் கொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்கள் மற்றும் ஆதங்கத்தினை பதிவுசெய்துவருகின்றனர்.

திரைப்படக் கவிஞர் பழநிபாரதி இந்த சம்பவம் குறித்து தனது முகநூலில்  பதிவிட்டுள்ள ‘சுளீர்’ கவிதை இங்கே…

—————————————

வனது இரத்தத்தை…
அவளது கண்ணீரை…

பார்க்க கண்கள் இல்லை…
துடைக்க கைகள் இல்லை…
பேச வாயில்லை…
நினைக்க இதயமும் இல்லை…
இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே

– பழநிபாரதி