நடிகர் விஜய் சேதுபதி உட்பட பலருக்கு தமிழகத்தின் கலைமாமணி விருது!

நடிகர் விஜய் சேதுபதி உட்பட பலருக்கு தமிழக அரசின் கலைமாமனி விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2011 -2018 ஆண்டு வரையில் கலைமாமணி விருது பெறுவோரின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ் வளர்சசி மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் செயற்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959ஆம் ஆண்டில் இருந்து குறித்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விருது பெறுவோரின் பட்டியல் வருமாறு:

2011
நடிகர்கள் – ஆர்.ராஜசேகர்இ பி.ராஜீவ்
நடிகை – குட்டி பத்மினி
நகைச்சுவை நடிகர் – பாண்டு
நடன இயக்குனர் – புலியூர் சரோஜா
பாடகி – சசி ரேகா

2012
நடிகர்கள் – என்.மகாலிங்கம்இ எஸ்.எஸ்.செண்பகமுத்து
நடிகைகள் – டி.ராஜஸ்ரீஇ பி.ஆர்.வரலட்சுமி
கானா பாடல் கலைஞர் – உலகநாதன்
இயக்குனர் – சித்ரா லட்சுமணன்

2013
நடிகர்இ இயக்குனர் – சி.வி.சந்திரமோகன்
பாடகர் – ஆர்.கிருஷ்ணராஜ்
நடிகர் – பிரசன்னா
நடிகை – நளினி
பழம்பெரும் நடிகைகள் – குமாரி காஞ்சனா தேவி சாரதா
நடிகர்கள் – ஆர்.பாண்டியராஜன்இ டி.பி.கஜேந்திரன்
நாட்டுப்புறப் பாடற்கலைஞர் – வேல்முருகன்
நாட்டுப்புறப் பாடகி – பரவை முனியம்மா

2014
நடிகர்கள் – கார்த்தி, சரவணன், பொன்வண்ணன்
இயக்குனர் – சுரேஷ் கிருஷ்ணா
பாடகி – மாலதி
நடன இயக்குனர் – என்.ஏ.தாரா
2015
நடிகர் – பிரபுதேவா
இயக்குனர் – ஏ.என்.பவித்ரன்
இசையமைப்பாளர் – விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் – யுகபாரதி
ஒளிப்பதிவாளர் – ஆர்.ரத்தினவேலு
பாடகர் – கானா பாலா
2016
நடிகர்கள் – சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி
2017
நடிகர்கள் – விஜய் சேதுபதி, சிங்கமுத்து,
நடிகை – பிரியா மணி
இயக்குனர் – ஹரி
இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா
2018
நடிகர்கள் – ஸ்ரீகாந்த்இ சந்தானம்
தயாரிப்பாளர் – ஏ.எம்.ரத்தினம்
ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன்
பாடகர் – உன்னி மேனன்  ஆகியோருக்கு குறித்த விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !