இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த சீனா – ஜேர்மன் இடையே ஒப்புதல்

இரு தேசங்களுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருதரப்பு மூலோபாய ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் சீனாவிற்கும், ஜேர்மனுக்கும் இடையே ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது.

சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் ஜனாதிபதி ஃபிரான்ங் வோல்டர் ஸ்ரைன்மையர் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையே நேற்று (திங்கட்கிழமை) இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உலகம் மிகவும் சிக்கலான மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், உலக நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பில் சீனாவும், ஜேர்மனும் ஒரே வகையான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக, சீன ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்தவகையில், உலகின் ஸ்திரத்தன்மையை மேலும் பலப்படுத்தும் வகையில் நாம் எமது இருதரப்பு மற்றும் பலதரப்பட்ட ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, சீனாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு தொடர்பிலும் சீன ஜனாதிபதி பல முன்மொழிவுகளையும் முன்வைத்தார்.

தொடர்ந்து ஜேர்மன் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், சீன- ஜேர்மன் உறவின் வளர்ச்சி குறித்து ஜேர்மன் திருப்தியடைந்துள்ளது.

இந்நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு விரும்புவதுடன், சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பை தீவிரப்படுத்தவும், சுதந்திர வர்த்தகத்தை நிலைநிறுத்தவும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !