இராணுவத்துக்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

இலங்கை இராணுவத்தின் புதிய ஊடாகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் நியமனம் குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதுவரை இராணுவ ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வரும் மேஜர் ஜெனரால் ரொஷான் செனவிரத்ன 51 ஆம் படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஏற்படும் வெற்றிடத்துக்கு பிரிகேடியர் சுமித் அத்தபத்து ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

52 ஆவது இராணுவ படையணியின் பிரிகேடியராக சுமித் அத்தபத்து கடமையாற்றியிருந்தார் என்று இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது..


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !