இராணுவத்திற்கு சுகபோகம் – நாங்களோ நடுத்தெருவில்: கேப்பாப்புலவு மக்கள் விசனம்!

இராணுவம் எமது காணிகள் மூலம் வருமானத்தினை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், நாங்கள் நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ளோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாப்புலவு மக்கள் ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம் ஒன்றரை வருடங்களை கடந்துள்ள நிலையிலும் இராணுவ முகாமுக்கு முன்பாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

104 குடும்பங்களுக்குச் சொந்தமான 181 ஏக்கர் காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை தமது போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கேப்பாப்புலவில் எஞ்சியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து அரசாங்கம், தமது வறுமை நிலையைப் போக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !