இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழப்பு
இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதான சந்திரசேகரன் விஸ்ணுதாஸ் எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழமை போல் வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் , இரவு உணவை உட்கொண்டு விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.
மறுநாள் காலையான நேற்று செவ்வாய்க்கிழமை நீண்ட நேரமாகியும் மகன் எழும்பாததை அடுத்து தாயார் சென்று எழுப்ப முற்பட்டுள்ளார். அதன் போது அசைவின்றி மகன் காணப்பட்டதை அடுத்து , உடனடியாக மகனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.