இரவு வேளைகளில் திறக்கப்படவுள்ள தெகிவளை மிருகக்காட்சிசாலை

தெகிவளை மிருகக்காட்சிசாலை வாரத்தில் 3 நாட்கள் இரவு வேளைகளில் திறந்திருக்கும் என்று தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார்.

வெள்ளி , சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 முதல் 10.00 மணிவரையில் ;மிருகக்காட்சிசாலையை திறந்துவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரவுவேளைகளில் மிருகக்காட்சி சாலைக்கு வருவோர் பிளாஸ் வைத்து புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க மேலும் குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !