இரண்டு வருடங்களின் பின்னர் முழுமையாக திறக்கப்படும் லூர்து மாதா தேவாலயம்
இரண்டு ஆண்டுகளின் பின்னர், லூர்து மாதா தேவாலயம் முழுமையாக திறக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லூர்து மாதாவின் ஒரு பகுதியான ‘la grotte de Lourdes’ பகுதி மூடப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மூடப்பட்டிருந்த இந்த தேவாலயத்தின் குறித்த இப்பகுதி இவ்வார வெள்ளிக்கிழமை திறக்கப்படுறது.
பிரான்சில் கொரோனா பரவல் வீழ்ச்சியடைந்து வருவதை அடுத்து, லூர்து தேவாலயம் முழுமையாக திறக்கப்படுவதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Lourdes தேவாலயத்துக்கு வருபவர்களில் 90% வீத சுற்றுலாப்பயணிகளாவர். வருடத்துக்கு 3.5 மில்லியன் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.