Main Menu

இரண்டு தலையுடன் பிறந்த ஆமை!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அண்மையில் அது குஞ்சு பொறித்தது. குஞ்சுகளில் ஒன்று ‘அல்பினோ’ எனப்படும் நிறம் அற்றதாகவும், இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாகப் பிறந்தது.

நூன் அவ்ஸானியிடம் இருக்கும் அந்த அரியவகை ஆமை குறித்து, சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதை கேள்விப்பட்ட ஏராளமானோர் நூன் அவ்ஸானி வீட்டுக்கு சென்று அந்த ஆமையை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

இதற்கிடையே நூன் அஸ்வானி இந்த ஆமையை 24,000 கவுண்ட்ஸிற்கு விற்க முடிவு செய்துள்ளார்.