இரண்டு கால்களால் நடக்கும் அதிசய கன்றுக்குட்டி – வைரலாகும் வீடியோ

இந்தோனேசியாவில் கன்றுக்குட்டி ஒன்று இரண்டு கால்களால் நடக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னங்கால்கள் இல்லாமல் பிறந்த இந்த கன்றுக்குட்டி இரண்டு கால்களால் நடக்கிறது. இதனை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். கன்றுக்குட்டி நடக்கும் போது மனிதர்களை போல நிமிர்ந்து நடக்கிறது.

அதனை வளர்ப்பவர் கன்றுக்குட்டியை விரட்டுவது வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரண்டு கால்களை இழந்த அந்த கன்றுக்குட்டியை வீடியோவில் உள்ள மனிதர் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !