இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்கள் பெற்றுள்ளது

பெர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்களைப் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் நேற்று ஆரம்பமான 2-வது டெஸ்ட் போட்டியில்  நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 90 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து.

இந்த இன்றையதினம் 2வது நாள் போட்டி ஆரம்பமான நிலையில் , அவுஸ்திரேலிய அணி 326 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.  இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்து விளையாடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !