இரண்டாவது கொரோனா வைரஸ் அலையை ஜேர்மனி தடுக்க முடியும்: சுகாதார அமைச்சர்
மக்கள் விழிப்புடன் இருப்பதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருந்தால், இலையுதிர்காலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை ஜேர்மனி தடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று நிலைமை குறித்து ஊடகங்களிடம் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வெளிநாடு செல்லும்போது விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும் மல்லோர்காவில் விருந்துபசாரம் செய்யும் போது விடுமுறை நாட்களில் சமூக விலகல் விதிகளை புறக்கணிப்பதைக் காட்டும் படங்களால் தான் கவலைப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பொறுமையின்மையை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் விருந்துகள் இருக்கும் இடங்களில் தொற்று ஆபத்து குறிப்பாக அதிகமாக உள்ளது.
அதனால்தான் தொற்றுநோய்களைத் தடுக்க விடுமுறை நாட்களில் குறிப்பாக முயற்சிக்க வேண்டும். இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் இரண்டாவது அலைகளை நாங்கள் தானாக எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஒன்றாக, ஒரு சமூகமாக, நாம் முன்பு செய்ததைப் போலவே அதைத் தடுக்கலாம் அலைகளை உடைத்து, தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருங்கள்’ என கூறினார்.
15.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஜேர்மனியின் கொரோனா வைரஸ் எச்சரிக்கை தடமறிதல் பயன்பாட்டை நிறுவியுள்ளனர். மேலும் 500,000 பேர் கடந்த வாரம் கொவிட்-19க்கு பரிசோதிக்கப்பட்டனர். இது வைரஸ் தொற்று பரவியதிலிருந்து சோதிக்கப்பட்ட அதிகப்பட்ச எண்ணிக்கையாகும்.
ஜேர்மனியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், ஒரு இலட்சத்து 99ஆயிரத்து 998பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது ஆயிரத்து 135பேர் உயிரிழந்துள்ளனர்.