இரண்டாயிரம் வார்த்தைகளை கற்றுக்கொண்ட கொரில்லா குரங்கு!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த 1971 ஆம் ஆண்டு ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்கிற்கு பிரசவம் நடந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது. ஆனால் 6 மாதம் ஆனதும் ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

இதற்கிடையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உளவியல் படித்துக் கொண்டிருந்த பென்னி என்ற மாணவிக்கு அந்த ஆண்டுக்கான செயல்திட்ட தலைப்பானது “மனித மிருக உரையாடல்” என அமையப்பெற்றிருந்தது

இந்நிலையில் மிருகக்காட்சி சாலைக்கு சென்ற மாணவி ஜாக்குலினால் ஒதுக்கப்பட்ட பெண் கொரில்லா குட்டியை தனக்கு தருமாறு கேட்டு அந்த கொரில்லா குட்டியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று குட்டி கொரில்லாவிற்கு கோகோ என பெயரிட்டார்.

உலகின் ஆகச்சிறந்த உறவு அந்த நொடி முதல் பென்னிக்கும் கோகோவுக்கும் இடையில் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்குள் மிருகங்களோடு பேசுவது என்ற ஆராய்ச்சியை முடித்து விடலாம் என பென்னி நினைத்திருந்த நிலையில் இன்றும் கோகோவுடனான அவரின் உறவு தொடர்கிறது.

இன்று கோகோ சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறாள் ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை அவளால் புரிந்துகொள்ள முடியும்.

இது குறித்து பென்னி கூறுகையில்:- இந்த உறவு உலகின் பார்வைக்கு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கும் கோகோவுக்குமான அன்பும், உறவும் எங்களுக்கு மட்டும் தான் புரியும். கோகோ ஒரு அற்புதமான மற்றும் அழகான தேவதை என கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !