இரண்டரை மணி நேரத்தில் சர்கார் டீஸர் படைத்த சாதனை

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டீஸர் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. டீஸர் வெளியான பத்து நிமிடத்தில் 10 லட்சமும் பார்வையாளர்களும், 20 நிமிடத்தில் 20 லட்சமும், 35 நிமிடத்தில் 30 லட்சமும், 55 நிமிடத்தில் 40 லட்சமும், 75 நிமிடத்தில் 50 லட்சமும், 1 மணி 50 நிமிடத்தில் 60 லட்சமும், 2 மணி 30 நிமிடத்தில் 70 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர் பார்த்து சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தீபாவளி அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !