இயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரபல இயக்குனர் மணிரத்னத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !