இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு

கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குர் ஷங்கர் தலா ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.
முன்னதாக நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, சூர்யா – கார்த்தி இணைந்து ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும், விஷால், சித்தார்த் தலா ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !