இன்று விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம்! – 30 வீத விமானங்கள் இரத்து!

தொடரூந்து தொழிலாளர்களின் இரண்டுநாள் வேலைநிறுத்தத்தினை தொடர்ந்து, இன்று சனிக்கிழமை எயார் பிரான்ஸ் விமான ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர்.
எயார் பிரான்ஸ் சேவைகளில் 30 வீதமானவை இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எயார் பிரான்ஸ் ஊழியர்களில் 34 வீதமானவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். இவர்களில் 26.2 வீதமானவர்கள் விமான பணியாளர் குழுவினர், 18.7 வீதமானவர்கள் விமான நிலைய பணியாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. எயார் பிரான்ஸ் ஊழியர்கள் சமீப காலமாக 6 வீத சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்திலும் இவர்கள் இதற்காக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எயார் பிரான்ஸ், இன்று 70 வீத சேவைகள் வழமை போல் இயங்கும் என உறுதிப்பட தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீண்ட தூர விமானங்கள் எவ்வித தடையையும் சந்திக்காது என குறிப்பிட்டுள்ளனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !