தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!
தென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
245 மீட்டர் உயரமான இந்த கோபுரம் , 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தாமரை கோபுரத்தின் நிர்மான பணிகள் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அரசியல் சர்ச்சைகள் காரணமாக 2012 ஆம் ஆண்டே சீன நிறுவனத்துடன் இணைந்து நிர்மான பணிகள் தொடங்கப்பட்டன.
குறித்த தாமரை கோபுரத்தில் ஐம்பது வானொலி அலைவரிசைகளும் , 20 தொலைகாட்சிகளுக்கான அலைவரிசைகளுக்குமான வசதிகள் உள்ளன. தலைநகரின் அடையாளச் சின்னமாக திகழப்போகும் இந்த கோபுரம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீரான காலநிலையின் போது சிவனொலிபாதமலையை இந்த கோபுரத்திலிருந்து காணக்கூடிய அரிய சந்தரப்பம் கிடைக்கும்.ஐந்து மின் தூக்கிகளை கொண்டுள்ளது. செக்கனுக்கு 7 மீட்டர் உயரும் இலங்கையின் முதலாவது மின் தூக்கிகளாகும்.
இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுழலும் உணவகத்திலிருந்து கொழும்பு நகரையே முழுமையாக காணமுடியும்.
பார்வையாளர்கள் அமரக் கூடிய மண்டபம் , ஆயிரத்து 500 வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடிய தரிப்பிட வசதிகள் , மற்றும் ஹோட்டல்கள் ஆடம்பர அறைகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
பிரான்ஸின் ஈபில் கோபுரம் , டுபாயில் புரூக் கலீபா கோபுரம், மலேசியாவில் தெற்ரோணர் இரட்டை கோபுரம் , அமெரிக்காவில் எம்பையர் கோபுரம் ஆகிய நகர சின்னங்களுடன் இலங்கையின் தாமரை கோபுரத்தின் பெயரும் இடம்பெற போகின்றது.