இன்று பல முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள் ஜனாதிபதியும் பிரதமரும்

பிரான்சின் புதிய பிரதமராக Édouard Philippe பதவியேற்று, சில நிமிடங்களில் இம்மானுவல் மக்ரோன், ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு பயணமாகியிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இருவரும் Élysée இல் சந்திக்கின்றனர்.
இம்மானுவல் மக்ரோன், ஜெர்மனியின் தலைவர் Angela Merkel ஐ சந்திப்பதற்காக, நேற்று மாலை பெர்லின் நகருக்கு பிரத்தியேக விமானத்தில் பயணமானார். நேற்று இரவு Angela Merkel உடன் சிறப்பு விருந்தில் கலந்துகொண்டார்.  இந்நிலையில், பிரான்சின் புதிய பிரதமராக Édouard Philippe பதவியேற்றார். பிரதமராக பதவியேற்றதன் பின்னர் இருவரும் முதன் முறையாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் சந்திக்கின்றனர்.
தொடர்ந்து, நேற்று மாலை தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து பரிசில் உள்ள காவல்துறையினரின் தலைமையகத்துக்குச் விஜயம் மேற்கொண்டார்.  தொடர்ந்து,  இன்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்,  பிரதமர் Édouard Philippe உடன் இணைந்து பல முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !