இன்று நான்கில் ஒரு TGV, பத்தில் ஒரு TER
இன்று புதன்கிழமை 11 ஆம் திகதியும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் கடந்த நாட்களை விட இன்று போக்குவரத்து முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய ஏழாவது நாள் வேலை நிறுத்தத்தில் TGV மற்றும் TER சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு TGV சேவைகள் இயங்க உள்ளன. அதேவேளை பத்தில் ஒரு TER சேவைகள் இயங்க உள்ளன. Intercity சேவைகளும் நான்கில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும்.


SNCF தரப்பில் பயணிகள் முடிந்தவரை பயணத்தை பிற்போடுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளை, தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தை தொடர்ந்து இன்று புதன்கிழமை மாலை பிரதமர் எத்துவார் பிலிப் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளார். சந்திப்பின் பின்னர் நாளைய வேலை நிறுத்தம் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பகிரவும்...