இனவெறி குற்றச்சாட்டு – ரால்ப் நார்தம் பதவி விலக மறுப்பு!

இனவெறி தொடர்பான குற்றச்சாட்டில் ஆளுநர் ரால்ப் நார்தம் பதவி விலக போவதில்லை என உறுதியாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தின் ஆளுநர் ரால்ப் நார்தம், கடந்த 1984-ம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் படித்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தில் 2 நபர்கள் இருந்தனர். அதில் கருப்பின வாலிபருடன், மற்றொரு நபர் வெள்ளை நிற ஆடையில் முகத்தை முடிக்கொண்டு நிற்கிறார்.

எனினும் அந்த புகைப்படத்தில் இருக்கும் 2 பேரில் தான் யார் என்பதை ரால்ப் நார்தம் குறிப்பிடவில்லை. அதே சமயம் ரால்ப் நார்தம் இந்த புகைப்படத்தின் மூலம் இனவெறியை தூண்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் மட்டும் இன்றி அவரது சொந்த கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவரை பதவி விலக கோரியும் கோரிக்கைகளும் வலுத்தன.

இந்நிலையில், குறித்த விவகாரத்தில் ரால்ப் நார்தம் மன்னிப்பு கோரியுள்ள போதும் இந்த குற்றச்சாட்டினால் ஒருபோதும் பதவி விலக போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !