இனப்பிரச்சினை தீர்க்கப்படின் தேசிய அரசாங்கத்தை ஆதரிப்போம்: இராதாகிருஷ்ணன்

தேசிய அரசாங்கத்தை அமைப்பதனால், இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமானால், அதற்கு முழுமையான ஆதரவினை வழங்கத் தயார் என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாறாக வெறுமனே அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதனை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சு பதவியினை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இதன்போது தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !