இனப்பிரச்சினை குறித்து விரைந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே நேற்றைய கூட்டத்தின் நோக்கம்
சுதந்திர தினத்திற்கு முன்பாக இனப்பிரச்சினை குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே நேற்றைய கூட்டத்தின் பிரதான நோக்கம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் நிலவிவரும் காணிப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை குறித்தும் இதன்போது விரிவாக பேசப்பட்டதாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால், இதற்கு வழங்க முடியுமான உடனடித் தீர்வுகள் குறித்தும் இதில் ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நீதி மற்றும் வெளிவிவவார அமைச்சர் உள்ளிட்டவர்கள் தற்போது இதற்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கைள் குறித்தும் தெரியப்படுத்தியதாக ரவூப் ஹக்கீம் கூறினார்.