இந்தோனேசியாவில் பாரிய மண்சரிவு – 7 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள் வடக்கு சுமாத்ரா மாகாணத்துக்கு கல்விச் சுற்றுலா ஒன்றுக்கான சென்றிருந்தனர்.

அங்குள்ள காரோ மாவட்டம், டவுலு கிராமத்தில் உள்ள விடுதியில் அவர்கள் அனைவரும் தங்கியிருந்த போது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த பகுதியில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது.

இதில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதியின் ஒருபகுதி மண்ணுக்குள் புதையுண்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ மீட்பு படையினர் காயங்களுடன் 7 பேரை மீட்டனர்.

இதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 7 மாணவர்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !