இந்தோனேசியாவில் தொடரும் இயற்கையின் சீற்றம்: பாலி நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் பாலி தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை உணரப்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இந்த உயிரிழப்புகள் சம்பவித்தள்ளன.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டம் இவ்வாரம் பாலி நகரில் நடைபெற்றிருந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவின் சுலவெசி தீவை 7.5 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருந்தது.

இந்நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

இவ்வாறாக காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், தற்போது மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !