இந்தோனேசியாவில் டெங்கு காய்ச்சல்: 133 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜனவரி மாதத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக இந்தோனேசிய நோய் தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 13 ஆயிரத்து 683  பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !