இந்திய டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்த நோயாளி!

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய டாக்டர் ஒருவரை அமெரிக்காவின் நோயாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அச்சுத என்ற டாக்டர் அமெரிக்காவில் உள்ள கான்ஸாஸ் என்ற பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார். இவர் பல அமெரிக்க இந்தியர்களுக்கு குடும்ப டாக்டராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர் உமர் ரஷித் தத் என்பவருக்கும் டாக்டர் அச்சுதாவிற்கு இடையே சமீபத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் இதன் முடிவில் உமர், அச்சுதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அமெரிக்க போலிசார் உமரை கைது செய்தனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !