Main Menu

இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை

தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக இந்திய குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வானுக்கு போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று வியக்கவைத்த பிரபல குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான்,அண்மையில், நடந்த எலைட் மென் குத்துச்சண்டை போட்டியின்போது, ஊக்க மருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து நடந்த சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டது. இதனால் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...
0Shares