இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப் படுத்துவது குறித்து ஆலோசனை!
இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, மாலைத்தீவு அதிகாரிகளுடன் இராணுவ செயலாளர் அஜய் குமார் ஆலோசனை செய்துள்ளார்.
இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான மூன்றாவது பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் மாலைத்தீவின் இராணுவ தலைமை தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்லா ஷமால் உள்ளிட்ட, இருநாட்டு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், அதற்கு ஒத்துழைப்பு தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்தியா-மாலைதீவு இடையிலான இந்த மாநாடு முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.