இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பதற்றத்திற்கு ஐ.நா கண்டனம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடிக்கும் பதற்றமான நிலைமையை ஐ.நா கண்டித்துள்ளது.

ஐ.நா.வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த ஐ.நா ஊடகச் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானே முழு காரணம் என இந்தியா தெரிவித்துவரும் நிலையில் அதனை பாகிஸ்தான் மறுத்து வருகின்றது.

இந்நிலையில், ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை தணிக்க ஐ.நா.வின் தலையீடு அவசியம் என இரு நாடுகளும் கோரியிருந்தமை  குறிப்பிடதக்கது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை கவலை அளிக்கின்றது என ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறு உருவாகிவரும் பதற்றமான நிலைமையை தணிக்க இரு நாடுகளும் அமைதியுடனும் பொறுமையாகவும் செயற்படுவது அவசியம் என்றும், இரு தரப்பினரும் தாக்குதல்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !