Main Menu

இந்தியா-சீனா இடையில் போர் மூண்டால் பாகிஸ்தானும் சீனாவுடன் சேர்ந்து தாக்கும்- அமரீந்தர் சிங்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் போர் மூண்டால் பாகிஸ்தானும் சீனாவுடன் இணைந்து இந்தியாவை தாக்கும் என பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் மூண்டால், பாகிஸ்தான், சீனாவுடன் உறுதியாகக் கூட்டுச்சேரும்.

சீனாவுடனான எந்தவொரு போரும் பாகிஸ்தானுடனான ஒரு கூட்டுப் போராகவே இருக்கும். ஆனால் நாம் மிகவும் சிறந்த நிலையில் இருக்கின்றோம்.

சீனர்கள் நம்மை வெல்ல நினைப்பது அவர்களின் முட்டாள்தனமான யோசனையாக இருக்கும். இருந்தாலும் நாம் எமது இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.