இந்தியா – ஆஸி டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய இன்றைய ஆட்டநேர முடிவில், அவுஸ்ரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, இந்தியா அணியுடன் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், அவுஸ்ரேலியா அணி 386 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

இன்றைய ஆட்டநேர முடிவில், பீட்டர் ஹேண்ட்ஸ்கொம்ப் 28 ஓட்டங்களுடனும், பெட் கம்மின்ஸ் 25 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதுவரையான முடிவுகளின் படி, அவுஸ்ரேலியா அணியின் அதிகபட்ச ஓட்டமாக மார்கஸ் ஹரிஸ் 79 ஓட்டங்களை பெற்றுள்ளார். பந்து வீச்சில் குப்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

சிட்னி மைதானத்தில் நேற்று முன் தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இந்தியா அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில் இந்திய அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக ரிஷப்பந்த ஆட்டமிழக்காது 159 ஓட்டங்களையும், புஜாரா 193 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லியோன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !