இந்தியாவுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டும்-கனேடிய பாதுகாப்பு அமைச்சர்

பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் குறித்து கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சிங் சஜ்ஜன் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இடையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பாதுகாப்பு அமைச்சர் நேற்று (செவ்வாய்க்கிழமை) புதுடெல்லியில் இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் குறித்து இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது குறித்து ஹர்ஜித் சிங் சஜ்ஜன் தெரிவிக்கையில், ‘ பரஸ்பர உறவுகளை ஏற்படுத்துதல் குறித்த சில நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம். எனினும் உறவுகளை மேம்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !