Main Menu

இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று! 24 மணித்தியாலத்தில் 4பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதிதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 5,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தினமும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால், 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...
0Shares