இந்தியாவில் தத்தெடுத்த குழந்தையை கொன்ற தந்தை குப்பை பையில் தூக்கிச் சென்றது அம்பலம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவரின் இரண்டாவது 3 வயது மகளான ஷெரின் மேத்யூஸ் அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டவர் ஆகும்.

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்தாள். இது அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லிக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. உடனே அவர் அந்த சிறுமியை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் விட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி காணாமல் போனாள்.

அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்கிடையே வெஸ்லி மேத்யூ ரிச்சர்ட்சன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேத்யூ கூறிய வாக்குமூலத்தில், ‘ஷெரினுக்கு இரவு பால் குடிக்கும் போது திடீரென அடைப்பு ஏற்பட்டது. அதனால் அவள் இறந்து விட்டாள். ஷெரின் உடலை நான் தான் வெளியே கொண்டு சென்று மறைத்து வைத்தேன்’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ஷெரின் கொலை வழக்கில் புதிய உண்மைகள் வெளிவந்தன. அவளது வளர்ப்பு தந்தை ஷெரின் உடலை குப்பை பையில் போட்டு எடுத்து சென்றுள்ளார். வீட்டிலிருந்து கிளம்பும் போது தனது போனில் உள்ள ட்ரக்கரை அணைத்து வைத்துள்ளார். பின்னர் தனது காரில் குப்பைகளை கொண்டு சென்றார். குப்பைகளை ஓரிடத்தில் போட்டு விட்டு ஷெரினின் உடலை மட்டும் எடுத்து சென்று கால்வாயில் வீசியுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு ட்ரக்கரை ஆன் செய்துள்ள உண்மை அனைவருக்கும் தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மேத்யூ மற்றும் சினியிடம் அவர்கள் பெற்ற குழந்தை வளரக் கூடாது. அவர்களுக்கு குழந்தையை வளர்க்கும் தகுதி இல்லை என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !