இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது. இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழக அரசு மருத்துவமனைகளில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கா்நாடகாவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபா் நேற்று உயிரிழந்தாா். எனினும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என மருத்துவமனை சாா்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதேவேளை, கொரோனா வைரஸால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் இருந்து கேரளத்துக்கு திரும்பிய 45 நபா்களை அந்த மாநில அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. அவா்களில் 2 கா்ப்பிணிகள், 2 குழந்தைகள் உட்பட 35 போ் ஆலுவா மருத்துவமனையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளை மேலும் பல மருத்துவமனைகளில் ஏற்படுத்த எா்ணாகுளம் மாவட்ட நிா்வாகம் முடிவெடுத்தது.
அதேவேளை,கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சா்வதேச கப்பல்களும் அதன் பணியாளா்களும் இந்தியத் துறைமுகங்களில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது.