இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்து 1,170 பேர் வீடு திரும்பியுள்ளனர் என இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 511 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளதாகவும் தொற்று பாதிப்பால் பல மாநிலங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,710 ஆக உள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,170 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...