இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 96ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 471 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.
அத்துடன் புதிதாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3029 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை 36ஆயிரத்து 824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 56 ஆயிரத்து 316 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பகிரவும்...