Main Menu

இந்தியாவில் களை கட்டியுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகை

இந்தியா முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டு வருகின்றது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம்- மும்பையில் பிரபலமான லால்பவுச்சா ராஜா விநாயகர் சிலைக்கு மக்கள் வழிபாடுசெய்து வருகின்றனர்.

அதேபோன்று தமிழகத்தில் பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் ஆகியற்றிலும் மக்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.