இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு
இலங்கை ஜனாதிபதியை இருதரப்பிற்கும் பொருத்தமான திகதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமரின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.