இந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நாளை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியாவின் 72ஆவது சுதத்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதன்பொருட்டு எல்லைப் புறங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீர், இராமேஸ்வரம் எல்லைப் பகுதிகளில் கடும் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

இந்தியா 72வது சுதந்திர தினவிழாவை கொண்டாடடுவதனை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்துக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலையடுத்து எல்லைப்புறங்கள் மற்றும் தலை நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களையும் முழு பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னே அனுமதிகின்றனர். அதேபோல் இராமேஸ்வரம் தீவுப்பகுதியும் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று காலை முதல் பொலிஸார் ஆயுதம் ஏந்தி தீவிர ரோந்துப் பணியில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பன் ரயில் பாலம், பேருந்துநிலையம், மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்

(1147) அதேபோல், இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீரலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு சகல வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், ஆயுதம் தரித்த படையினர் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்கள், பொது இடங்கள் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !