இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிகின்றது – மோடி

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் பாகல்பூர் பகுதியை சேர்ந்த ரத்தன் குமார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் மோடி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர், “புல்வாமா தாக்குதலால் உங்கள் நெஞ்சில் கொந்தளிக்கும் நெருப்பு என்னுடைய இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது என்பதை இங்கு கூடியுள்ள மக்களுக்கு நான் தெரிவித்து கொள்கிறேன்.

இன்று தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் ஒன்றான குழாய் மூலம் எரிவாயு வழங்கும் ‘உஜ்ரா கங்கா யோஜானா’ திட்டத்தின் மூலம் பீகார் மட்டுமின்றி அருகாமையில் உள்ள ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களும் சிறப்பான வளர்ச்சியை பெறும்“ என குறிப்பிட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !