இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி பிரமாணம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.
இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆகிறார்.
இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இன்று இரவு 7 மணியளவில் ராஸ்ட்ரபதி பவனில் இடம்பெறும் வைபவத்தில் ஏனைய அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். பல உலக நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
குறிப்பாக பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் பங்கேற்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்படி, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீத், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேபாள் பிரதமர் கே.பி சர்மா ஒலி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.