இந்தியன் 2’ படப்பிடிப்பிற்கு இந்தியன் தாத்தாவாக வந்தார் கமல்ஹாசன்!

லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கும் கமல்ஹாஷனின் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகியது.

குறித்த படத்தின் பூஜையின் போது கமல்ஹாசன், இந்தியன் முதல்பாகத்தில் தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி) கதாபாத்திரமாகவே பங்கேற்றிருந்தார்.

இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று பூஜையுடன் படத்தின் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரமாண்டத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் நிறுவுனர் அல்லிராஜா சுபாஸ்கரன், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், இயக்குநர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதுடன், ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !