இத்தாலியில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
இத்தாலியில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் இறந்தனர். அங்குள்ள இச்சியாதீவு சிறந்த சுற்றுலா தளமாக திகழ்கிறது. முற்றிலும் மலைபாங்கான இந்த இடத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதே போல விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டனர். இந்த தீவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பிறந்த குழந்தை, 2 சிறுமிகள் உள்பட 7 பேர் இறந்தனர். 5 பேரை காணவில்லை, அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மாயமானவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.