Main Menu

இத்தாலியில் தேர்தல்களுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது!

இத்தாலியில், ஏழு பிராந்திய தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான அரசியலமைப்பு வாக்கெடுப்பிலும் இத்தாலியர்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்த வாக்களிப்பு அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் இரவு 11 மணி வரை இடம்பெறுவதுடன் மறுநாள் காலை 7 மணி முதல் மாலை மூன்று மணிவரையும் வாக்களிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேசிய ஆளும் கட்சிகளான ஃபைவ் ஸ்டார் இயக்கம் மற்றும் மத்திய இடது ஜனநாயகக் கட்சிக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் குறைபாடுகள் மக்களின் ஆதரவில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தீவிர வலதுசாரி லீக்கின் மேட்டியோ சால்வினி தலைமையிலான எதிர்க்கட்சி, வெனெட்டோ, வெனிஸைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் வடக்கில் லிகுரியா உள்ளிட்ட குறைந்தது மூன்று பிராந்தியங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், நேப்பிள்ஸைச் சுற்றியுள்ள பிராந்தியமான காம்பானியாவில் மட்டுமே மத்திய இடது ஜனநாயகக் கட்சி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லு மார்ச்சே, புக்லியா மற்றும் வால்லே டி ஆஸ்டா பிராந்தியங்களில் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வாக்கெடுப்பில் 51.6 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தேர்தல்களுக்கான முடிவுகள் நாளை திங்கட்கிழமை மாலை முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares