Main Menu

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு

ஆசியாவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவந்த கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பாவையும் உலுக்க தொடங்கியுள்ளது.

ஆசியாவை தவிர்த்து ஐரோப்பாவின் இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது.

இத்தாலியில் தற்போது வரை 229 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், சில நகராட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இத்தாலியின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஏஞ்சலோ பொரெல்லி, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கூறுகையில்,

‘பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அதாவது 167 பேர், வடக்கு பிராந்தியத்தில் உள்ளனர். வைரஸ் பாதித்த 91 பேர் தற்போது வீட்டில் தனிமையில் உள்ளனர்’ என கூறினார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொற்றுநோய்கள் வெவ்வேறு நாடுகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றன.

உலகெங்கிலும் கட்டுப்பாடற்ற முறையில் பரவி வரும் ஒரு தீவிர நோயை விவரிக்க தொற்றுநோய் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. சில வல்லுநர்கள் இது இப்போது தவிர்க்க முடியாதது என்று நம்புவதாகக் கூறுகின்றனர்.