இதுவரை இல்லாத மிக குறைந்த அளவுமஞ்சள் மேலங்கி போராளிகள்

நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பித்த மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் 17 ஆவது வார போராட்டம் நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்றது. இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த அளவு போராளிகள் களத்தில் போராடியுள்ளனர்.
உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, நேற்று மார்ச் 9 ஆம் திகதி, நாடு முழுவதும் 28,600 போராளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்தவார சனிக்கிழமையே மிக குறைந்த அளவானவர்களே ( 39,300) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த கணிசமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேவேளை, கடந்தவாரம் பரிசுக்குள் 4,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, இந்தவாரம் வெறும் 3,000 பேர் மாத்திரமே பங்கேற்றனர்.
பரிசில் நாள் முடிவில் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், ஈஃபிள் கோபுரத்துக்கு முன்னாலும், சாள்-து-கோல் விமானநிலையத்திலும் மஞ்சள் மேலங்கி போராளிகளை காணக்கூடிதாக இருந்தது. தவிர, Lyon, Besançon, Strasbourg, Lille, Bordeaux, Montpellier, Avignon, Quimper மற்றும் Puy-en-Velay ஆகிய நகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது


(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !