இண்டோஸ் டென்னிஸ் தொடர் – றோபர்டோ படிஸ்டா அகுட் வெற்றி!

ஆண்களுக்கே உரித்தான சுவிஸ் இண்டோஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு, இரண்டாம் சுற்று போட்டியொன்றில் றோபர்டோ படிஸ்டா அகுட் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இப்போட்டியில், ஸ்பானிஷ் வீரர் றோபர்டோ படிஸ்டா அகுட், செர்பியன் வீரர் டூசான் லஜோவிக்-ஐ எதிர்கொண்டார்.

இதில் டை பிரேக் வரை நீடித்த முதல் சேட்டை அக்ரோஷமாக விளையாடிய டூசான் லஜோவிக் 7 -6 என கைப்பற்றினார்.

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய றோபர்டோ படிஸ்டா அகுட், 6-3 எனவும், வெறியை தீர்மானிக்கும் இறுதி செட்டை 6-3 என கைப்பற்றிஇருந்தார்.

இறுதியில் 7-6, 6-3, 6-3 என கைப்பற்றி ஸ்பானிஷ் வீரர் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஜேர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !