இணக்கப் பாடின்றி நிறைவு பெற்றது கட்சி தலைவர் கூட்டம் – மனோ கணேசன்

ஜனாதிபதிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற நடைமுறைக்கு அமைய முறையாக சமர்ப்பிக்கப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இதன்போது அறிவித்துள்ளன.

உரிய நடைமுறைக்கு அமைவாகவே ஏற்கனவே இரு தடவைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய முன்னணிஅறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றுள்ளது என மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !